1. Home
  2. தமிழ்நாடு

விமானம் புறப்பட்ட அடுத்த நிமிடமே விழுந்து நொறுங்கும் காட்சி..!

Q

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு மதியம் 1:38 மணிக்கு கிளம்பியது. புறப்பட்ட இந்த விமானம், விமான நிலையம் அருகே இருந்த மருத்துவ கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து நொறுங்கியது.

விபத்துக்குள்ளான போயிங் விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 43 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர், போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த 7 பேர் பயணித்தனர். அவர்களுடன் 12 ஊழியர்களும் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்து விட்டதாக அஞ்சப்படுகிறது.

தற்போது வரை 204 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு சிலரது சடலங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்துள்ளன. அவற்றை உறவினர்கள் டி.என்.ஏ., பரிசோதனை மூலம் கண்டறிய மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான புதிய வீடியோ வெளியானது. அதுவும் புறப்பட்ட ௧ நிமிடத்தில் இந்த விபத்து எட்டப்பட்டுள்ளது...

பதற வைக்கும் வீடியோ இதோ


 

Trending News

Latest News

You May Like