நண்பனுக்கு விபத்து என வந்த போன்... பெண்ணை கடத்தி மகள் முன்பு சீரழித்த கும்பல் !

நண்பனுக்கு விபத்து என வந்த போன்... பெண்ணை கடத்தி மகள் முன்பு சீரழித்த கும்பல் !

நண்பனுக்கு விபத்து என வந்த போன்... பெண்ணை கடத்தி மகள் முன்பு சீரழித்த கும்பல் !
X

விபத்து எனக்கூறி உடன் பணியாற்றும் பெண்ணை தனியாக வரவழைத்து நாசம் செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் கணவனை பிரிந்து தனது 10 வயது மகளுடன் வசித்து வந்தார்.

இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், அலுவலகத்தில் உங்களுடன் பணியாற்றும் நபருக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது என்றும், அவர் உயிருக்கு போராடி வருவதால் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு கூறினார்.

இதனால் பதற்றமடைந்த அந்த பெண் மகளை அழைத்துக்கொண்டு பேருந்தில் புறப்பட்டார். அவருக்காக காரில் காத்திருந்த நபர் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து வலுக்கட்டாயமாக குடிக்கவைத்தார். பின்னர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்த அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்றார்.

ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற போது அங்கு ஏற்கனவே இரண்டு பேர் காத்திருந்தனர். மூவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பிறகு அந்தப் பெண்ணையும், அவரது மகளையும் காரில் அழைத்துச் சென்று சாலையோரத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் அங்கிருந்து நேராக காவல்நிலையத்திற்கு சென்ற புகார் அளித்தார். அப்பெண் தன்னை 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் புகார் அளித்தார்.

இதனையடுத்து அப்பெண் குறிப்பிட்ட இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அப்பெண்ணை அக்கும்பல் குறிவைத்து தனியாக அழைத்தது எப்படி, உறவினர்கள் யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

newstm.in

Next Story
Share it