மெக்கா மசூதி மீது காரை மோதிய நபர்! வளைத்துப்பிடித்த போலீஸ்!!

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபரை போலீசார் வளைத்துப்பிடித்தனர்.
மசூதியின் தெற்கு நுழைவாயிலை நோக்கி அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று சாலைத் தடுப்புகளை மோதித்தள்ளி விட்டு சுவற்றில் மோதி நின்றது.
கார் வேகமாகச் செல்வதைக் கண்டதும் அதனைப் பின் தொடர்ந்து ஓடிவந்த போலீசார் விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்தனர். அந்த நபர் அசாதாரண நிலையில் இருந்ததாகக் குறிப்பிட்ட போலீசார் அவர் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
மெக்கா மசூதியின் மீது காரை மோதிய நபர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
newstm.in