1. Home
  2. தமிழ்நாடு

மோசடி வழக்கில் கைதானவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..!

1

கரூர் மாவட்டம் குளித்தலையில் மோசடி வழக்கில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், கைது செய்யப்பட்ட ராஜாவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மதியழகன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் மாவட்டம், குளித்தலையில் மோசடி வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி என்று செய்திகள் வந்து கொண்டுள்ளன. கைது செய்யப்பட்ட ராஜாவிற்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.

அவருக்குத் தமிழக வெற்றிக் கழகத்திலோ அல்லது தளபதி விஜய் மக்கள் இயக்கத்திலோ எந்தவிதமான பொறுப்பும் வழங்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like