1. Home
  2. தமிழ்நாடு

கள்ளக்காதல் ஜோடி இருந்த காட்சி - அதிர்ந்த ஊர் மக்கள்..!

Q

நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஜீவா என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆலிசா என்ற பெண்ணும் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் ஊருக்குத் தெரியவந்ததால், இருவரும் அவமானத்தால் குறுகிப்போனார்கள். இந்நிலையில தான் நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் அவர்கள் இருந்த நிலையைக் கண்டு மொத்த ஊரும் ஆடிப்போனது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையம் பகுதியை ஒட்டியுள்ள கோட்டூர் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனுக்கு தகவல் ஒன்று வந்தது.

அதாவது மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் ஆண் மற்றும் பெண் ஆகியோரது உடல் கிடப்பதாக அப்பகுதி விவசாயிகள் கூறினார்கள். இதையடுத்து விஏஓ பாலமுருகன் சம்பவ இடத்துக்கு வந்து உறுதி செய்தார்.

பின்னர் விஏஓ பாலமுருகன், இதுதொடர்பாக நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ஆண், பெண் உடல்கள் தோட்டத்தில் கிடப்பது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார், சம்பவம் நடந்த தோட்டத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அங்கு வாலிபர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் கையில் கத்தியுடன் கிடந்தார். அருகில் பெண் ஒருவர் பூச்சி மருந்து பாட்டில், தண்ணீர் பாட்டில், பூ மற்றும் உணவு பொட்டலங்கள் இருந்தது.

இதனால் இருவரும் உயிரை மாய்த்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலக்கோட்டை போலீசாருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்குப் போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்து கிடந்தவர்கள், யார் என்பது தெரியவந்தது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த மைக்கேல்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி 32 வயதான ஜீவா என்பதும், அவருக்கு அருகில் பிணமாகக் கிடந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் மனைவி ஆலிசா (30) என்பதும் தெரியவந்தது.

ஆலிசாவின் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள தோட்டத்தில் ஜீவா கூலிவேலை செய்து வந்தார். அப்போது, அவருக்கும் ஜீவாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் அவர்களுக்கிடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியதாம்.

இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தார்களாம். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்ததால், அவமானம் தாங்க முடியாமல் 2 பேரும் அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக்குச் சென்று உயிரைவிட்டதாகப் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஜீவா தனக்குதானே கத்தியால் கழுத்தை அறுத்து உயிரைவிட்டதும், ஆலிசா பூச்சி மருந்தைக் குடித்து உயிரை விட்டதும் தெரியவந்தது. உயிரைவிட்ட ஆலிசாவுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளான். ஜீவாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like