கோவை மக்களே நீண்ட நாள் காத்திருப்புக்கு பலன்..!
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் பலரும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். இதுவரை கூட்டுக்குடும்பமாக இருந்தவர்கள் தனியாக பிரித்து தனி ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 1405 ரேஷன்கடைகள் உள்ளன. இங்கு 11.02 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கின்றன..
இந்நிலையில் கடந்த சில மாங்களாக கோவை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் புதிய ரேஷன்கார்டுகள் வழங்க கோரி அந்தந்த பகுதிகளில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பித்துள்ளனர்.ஆன்லைன் வாயிலாகவும் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள்.
ரேஷன்கார்டு தாரர்களில் திருமணமான பலர் பெயர் நீக்கம் கோரி விண்ணப்பம் செய்து, புதிய ரேஷன்கார்டு வழங்க க்கோரி விண்ணப்பம் செய்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் 7 ஆயிரம் பேர் புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளார்களாம்.. அவற்றை சரிபார்த்து ஆய்வுசெய்து பரிசீலனை செய்யும் பணியில் அதிகாரிகள் விறுவிறுப்பாக இறங்கி உள்ளனர். முன்பு ரேஷன் கார்டுகள் புத்தக வடிவில் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுவதால் அவை சென்னையில் மட்டுமே தயராகுவதால் அங்கிருந்த தமிழகத்தின்அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியானவர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை காரணமாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகள் விண்ணப்பித்தவர்களுக்கு கிடைக்க போகிறது.
கோவையில் புதிய ரேஷன்கார்டுகள் கோரி இதுவரையில் 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் தகுதியுடைய அனைவருக்கும் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்படும் என்று குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.. கோவையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வீடு தேடி வரப்போகிறது.