1. Home
  2. தமிழ்நாடு

சென்னை மக்கள் ஷாக்..! 25 ரூபாய் பால் பாக்கெட் 100 ரூபாய்க்கு விற்பனை..!

1

சென்னையில் அரை லிட்டர் பால் பாக்கெட், 100 ரூபாய் வரை விற்கும் கொடுமை நடந்தது. வழக்கமாக, 20 லிட்டர் குடிநீர் கேன், 30 - 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இரண்டு நாட்களாக, சென்னையின் பல பகுதிகளில், 40 - 50 ரூபாய் வரை விற்பனையானது. வெள்ளம் சூழ்ந்து மக்கள் தத்தளித்த பகுதிகளில், ஒரு கேன், 75 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. அதுபோல், காய்கறிகளும், மூன்று மடங்கு விலை வைத்து விற்கப்பட்டது.

'இதுபோன்ற இக்கட்டான சூழலில், மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அதை விட்டு, இதுபோன்று லாபம் ஈட்டும் நோக்கில் வியாபாரிகள் ஈடுபட வேண்டாம்' என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

மிக்ஜாம் புயல் எதிரொலியால், சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி முனைப்பு காட்டி வருகிறது. பல்வேறு இடங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. குறிப்பாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் குறைவாக உள்ளது. இதனால், பால் விலை விண்ணை முட்டும் அளவிற்கு விற்பனையாகி வருகிறது. குறிப்பாக ஒரு பாக்கெட் பால் 100 ரூபாய் வரையிலும் அப்பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like