1. Home
  2. தமிழ்நாடு

சோகத்தில் சென்னை மக்கள்..! உடைக்கப்படும் சென்னையின் 40 வருட அடையாளம்..!

1

உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என அந்தக் காலத்திலேயே 4 திரையரங்குகளைக் கொண்டிருந்தது உதயம் காம்ப்ளக்ஸ். அந்தக் காலத்திலிருந்த சினிமா ரசிகர்களின் வருமானத்திற்குத் தகுந்த தரமான பொழுது போக்கு மையமாக மல்டிபிளக்ஸ் அனுபவத்தைக் கொடுத்ததும் இதுதான். இன்று 'புஸ்பா 2' படத்துடன் தனது 40 ஆண்டுகால பயணத்தை முடித்துக் கொள்ள உள்ளது. வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்திற்குப் பின் இதனை இடிக்கும் வேலைகள் தொடங்க உள்ளது.

 

இங்கே 1983இல் முதன்முதலாக ரஜினியின் 'சிவப்பு சூரியன்' வெளியானது. இரண்டாவது 'சட்டம்'. அதன் பின்னர் வரிசையாக ஆயிரக்கணக்கான படங்கள் வெள்ளிவிழாவைக் கொண்டாடி இருக்கின்றனர். 'காதலுக்கு மரியாதை', 'தளபதி' 'நாட்டாமை', 'படையப்பா', 'அவ்வை சண்முகி', 'தெனாலி', 'கில்லி' எனப் பல படங்கள் 200 நாட்கள்கூட ஓடி இருக்கின்றன. இதில் 'படிக்காதவன்', 'சந்திரமுகி', ஆகிய படங்கள் 275 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தன.

இதை 1979இல் கட்ட தொடங்கினார்கள். 83இல் இயங்க ஆரம்பித்தது. இதன் உரிமையாளர்கள் மொத்தம் 6 பேர் அண்ணன் தம்பிகள். திருநெல்வேலியில் உள்ள உதயத்தூர் கிராமத்திலிருந்து சென்னைக்குக் குடிபெயராதவர்கள். அந்தக் காலத்தில் சில தியேட்டர்களிதான் 70எம்.எம். திரை வசதி இருந்தது. அதில் உதயமும் ஒன்று. அதில் படம் பார்ப்பதே பெரிய அனுபவம்.

சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இந்த தியேட்டர் தொடங்கப்பட்ட போது இந்தப் பகுதிக்கு பஸ் வசதியே கிடையாது. இரவு படம் பார்த்துவிட்டுச் செல்பவர்களுக்காகத் தனியாகப் பேருந்து வசதியைச் செய்து கொண்டு வந்தது நிர்வாகம். அந்தளவுக்கு ஒதுக்குப் புறமாக இருந்த அசோக் நகர் இன்று ஹாட் ஆஃப் த சிட்டியாக மாறி இருக்கிறது. முதன்முதலாக 2 ரூபாய் டிக்கெட் விலையுடன் தொடங்கி படிப்படியாக இப்போது அதிகபட்சமாக 105 வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முழுவதும் ஏசி வசதி கொண்டது. கடந்த 5 ஆண்டுகளாகவே இந்த 4 தியேட்டர்களிலும் மக்கள் கூட்டம் குறைய தொடங்கிவிட்டது. இதே தியேட்டரின் பக்கம் இருந்த ஸ்ரீநிவாசாவும் இடிக்கப்பட்டுவிட்டது. காசி மட்டுமே இங்கே இயங்கி வருகிறது.

Trending News

Latest News

You May Like