சோகத்தின் உச்சம்..! இரு பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்து – மீட்பு பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் உயிரிழப்பு!
திருப்பூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் உள்ள சென்னை – பெங்களூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் சொகுசு பேருந்து மோதியதில் ஓட்டுநர் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அத்துடன் பேருந்தில் பயணித்த 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து விபத்து நடைபெற்ற இடத்தில் காவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் மீட்பு பணி ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நெஞ்சு வலியால் திடீரென உயிரிழந்தார். இந்த நிகழ்வு காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.