அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..! மின்சார ரயில் என்ஜின் பிளாட்பாரம் மீது ஏறி நின்றதால் பரபரப்பு..!
உ.பி சாகுர் பாஸ்தி ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் நேற்று இரவு 10.49 மணிக்கு மதுரா ரயில் நிலையம் வந்ததுள்ளது. ரயில் நிலையத்தின் 2ஏ நடைமேடையில் நிறுத்த அனுமதிக்கப்பட்டது. அப்போது திடீரென்று என்ஜின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரயில் தடம் புரண்டது. திடீரென்று ரயில் என்ஜின் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி பிளாட்பார்ம் மீது ஏறி நின்றது.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் வேகமாக ரயிலில் இருந்து இறங்கினர். மேலும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்நு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது ரயில் என்ஜின் தடம் புரண்டது எப்படி என்பது பற்றி தெரியவில்லை. அதோடு அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து ரயில் என்ஜினை பிளாட்பாரத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இது குறித்து மதுரா ரயில் நிலையத்தின் இயக்குநர் ஸ்ரீவத்சவா கூறுகையில், “ரயிலில் இருந்து அனைத்து பயணிகளுக்கும் இறக்கிவிடப்பட்டுள்ளது. உயிர்சேதம் எதுவும் இல்லை. ரயில் விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
#MathuraJunction मथुरा में आधी रात को ड्राइवर ने ब्रेक की जगह दबा दिया एक्सीलेटर,पटरी से उतर प्लेटफॉर्म पर चढ़ गई ट्रेन#TrainAccident #Mathura #IndianRailways #ISKCON #EmraanHashmi #Oscars2024 #AAP_कार्यकर्ता_समागम #TigerKaMessage #SalmanKhan pic.twitter.com/St2wfRlezd
— Tv 24 Network (@Tv24networkes) September 27, 2023

சேதமடைந்த நடைமேடை, மின்கம்பம் உள்ளிட்டவை சரிசெய்யும் பணியில் வடக்கு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், விபத்து குறித்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் நேற்று இரவு மதுரா ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.