இன்று புறநோயாளிகள் பிரிவு இயங்காது..! ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு..!
ஜிப்மர் மருத்துவமனை வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் ” மத்திய அரசு விடுமுறை தினமான 15.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்” எனவும் அறிக்கையில் அறிவித்துள்ளனர்.
முதல் சீக்கிய குரு மற்றும் சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவ் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் தான் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் குருநானக் ஜெயந்தி ஒவ்வொரு தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் நவம்பர் 15 குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.