1. Home
  2. தமிழ்நாடு

தலையை வெட்டு என சொல்பவர் சாமியார் அல்ல; கசாப்பு கடைக்காரர் - சீமான்..!

1

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்டியாளர்களிடம் பேசியதாவது, பாரத் என்ற பெயரை எடுத்து விட்டு வேறு பெயரை வைத்து விட்டால் எல்லாம் மாறி விடுமா?  நாங்கள் தமிழர்கள்;  இது என் நாடு, தமிழ்நாடு.  ஒரே நாடு ஒரே தேர்தல் போல் ஏன் ஒரே நீர் இல்லை.  ஒரே நாடு என்று பேசுபவர்களால் ஏன் காவிரி நீரை பெற்று தர முடியவில்லை. இன்று பயிர் காய்கிறது, நாளை வயிறு காயும்;ஒரே நாடு ஒரே தேர்தலை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்தார்;ராமேஷ்வரத்தில் தாமரை, சூரியன் நேரடியாக போட்டியிட்டால் எனது வேட்பாளரை திரும்ப பெறுவேன்; நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றுங்கள், நான் முழுமையாக திமுகவுக்கு ஆதரவு தருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

"இந்து என்ற பெயரும் ஆங்கிலேயர் வைத்தது தானே- அதையும் மாற்ற வேண்டியது தானே. ஆட்சிக்கு வந்த உடனேயே பாரத் என பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டியது தானே?

ராமேஸ்வரத்தில்  தாமரை, சூரியன் நேரடியாக போட்டியிட்டால் எனது வேட்பாளரை திரும்ப பெறுவேன்.நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசை கூட்டணியில் இருந்து வெளியேற்றுங்கள், நான் முழுமையாக திமுகவுக்கு ஆதரவு தருகிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசினால் அமித் ஷா ஏன் கோபப்படுகிறார்?  உதயநிதியின் தலைக்கு விலை அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் நான் 100 கோடி தருகிறேன் . தலையை வெட்டு,  நாக்கை வெட்டு என்று சொன்னால் அவர் சாமியார் அல்ல;  கசாப்பு கடைக்காரர் என்றார்.   

Trending News

Latest News

You May Like