இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த முதியவர்.. கட்டிவைத்து அடித்து கொலை செய்த தாய் !

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை அருகே ரயில்வே கேட் பகுதியில் ஆணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதிகாலையிலேயே சடலத்தை கண்ட மக்கள் பதறிபோய் போலீசாருக்கு தகவல் கூறினர்.
தகவல் அறிந்த காரமடை போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு விசாரித்தனர். அவரது உடலில் ரத்தம் அதிகளவில் வெளியேறவில்லை என்பதால் சிலர் சேர்ந்து அடித்தே கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
பின்னர் அந்நபர் குறித்து விசாரித்தப்போது அவர் அப்பகுதியில் வசித்து வரும் தனலட்சுமி என்பவர் வீட்டிற்கு வந்தவர் என தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனலட்சுமியையும் அவரது தாய் மல்லிகாவையும் போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.
அப்போது அவர்கள் இருவரும் திடுதிப்புனு தாங்கள்தான் அவரைக் கொலை செய்தோம் என கூறியதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காவல்நிலையம் அழைத்துச்சென்று நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும் கொலை செய்யப்பட்ட நபர் ரத்தினபுரியைச் சேர்ந்த 50 வயதான பெரியசாமி என்பது தெரியவந்தது.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசிக்கும் பெரியசாமி தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கணவரை இழந்த 32 வயதான தனலட்சுமி தாய் மல்லிகாவுடன் வசித்து வந்தார்.
சமீபத்தில், பெரியசாமி தனது செல்போனில் இருந்து தவறுதலாக தனலட்சுமியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுபேசியுள்ளார். தவறான அழைப்பு என தனலட்சுமி துண்டித்த பின்பும் பெரியசாமி விடவில்லை.
தனலட்சுமியைத் தொடர்ந்து தொடர்புகொண்டு ஆபாசமாக பேசியதோடு தகாத உறவுக்கு வருமாறு தொல்லை அளித்துள்ளார். அவ்வப்போது நேரிலும் தொல்லை கொடுத்து, அடிக்கடி செல்போனிலும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தனலட்சுமி இது குறித்து தனது தாய் மல்லிகாவிடம் கூறவே, பெரியசாமிக்குப் பாடம் கற்பிக்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.
வழக்கம்போல் செல்போனில் பெரியசாமி அழைத்தப்போது, தனது வீட்டு முகவரியைச் சொல்லி அங்கு வரும்படி தனலட்சுமி கூறியுள்ளார். பெரியசாமியும் பெரியார் நகரில் சிலரிடம் முகவரி கேட்டு தனலட்சுமி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு தனலட்சுமி, அவரது தாய் மல்லிகா மற்றும் உறவினர்கள் சிலர் இருந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பெரியசாமி தப்பியோட முயற்சித்தப்போது அவர்கள் பிடித்து தகராறு செய்தனர்.
பின்னர் ஒருகட்டத்தில், அனைவரும் சேர்ந்து அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அடி தாங்க முடியாமல் பெரியசாமி உயிரிழந்தார்.
அதிர்ச்சியடைந்த தனலட்சுமி உள்ளிட்டோர் அவரது சடலத்தை அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள தண்டவாளத்தின் அருகே சாலையோரம் விபத்து நடந்தது போல போட்டு விட்டு வீட்டிற்குத் திரும்பி விட்டனர். இவ்வாறு அவர்கள் இருவரும் வாக்குமூலம்
இதனையடுத்து தனலட்சுமி மற்றும் மல்லிகா மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in