சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
X

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால், அருகில் இருந்த மாநகராட்சி கழிப்பறையைப் பயன்படுத்தி வந்தார்.

நாள்தோறும் கழிவறைக்கு சென்று வருவதை பாலசுப்பிரமணியன் கண்காணித்துள்ளார். பின்னர் சம்பவத்தன்று சிறுமி தனியாக வருவதை அறிந்த முதியவர், சிறுமியை மிரட்டி தனியாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பயம் காரணமாக இதனை யாரிடமும் சிறுமி கூறவில்லை என்பதால் அதனை சாதகமாக பயன்படுத்தி பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தெரியந்தது. இந்த சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்தது.

பின்னர், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி, தன் பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவுற்று குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் முதியவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து முதியவர் பாலசுப்பிரமணியன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

newstm.in

Next Story
Share it