ஏமாற்றி ஆம்புலன்ஸை கால் டாக்ஸி போல் பயன்படுத்திய முதியவர்! அதுவும் 39 முறை!!
முதியவர் ஒருவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக 39 முறை ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைவானை சேர்ந்த வாங் என்ற முதியவர் ஒருவர், சூப்பர் மார்க்கெட் சொல்வது தொடங்கி வீட்டுத் தேவைக்காக செல்வது வரை அனைத்து போக்குவரத்து தேவைக்கும் இலவச ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வந்துள்ளார். அவரது வீடு அரசு மருத்துவமனை அருகே உள்ளதாக கூறப்படுகிறது.
அவர் அப்பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், அடிக்கடி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை வளாகத்திற்கு வரும் வாங், மருத்துவரை பார்க்காமலேயே வெளியே சென்றுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், வாங்-கை தொடர்ச்சியாக கண்காணித்து வந்துள்ளனர். இதனிடையே வாங் கடைசியாக வந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போதும் அப்போதும் அதேபோல் நடந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தது. புகாரின் பேரில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், வாங் கடந்த ஒருவருடத்தில் மட்டும், இதுபோன்று 39 முறை ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸார் அவரை அழைத்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து இனிமேல் இதுபோல் செய்தால் சிறையில் அடைத்துவிடுவதாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
newstm.in