1. Home
  2. தமிழ்நாடு

காவிரி விவகாரத்தில் ஒழுங்காற்றுக்குழுவில் நியமித்த அதிகாரிகள் சரியில்லை - சீமான்..!

1

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான் கூறியிருப்பதாவது: காவிரி விவகாரத்தில் ஒழுங்காற்றுக்குழுவில் நியமித்த அதிகாரிகள் சரியில்லை. நீதிமன்றம் காவிரி ஆணையம், ஒழுங்காற்று குழு முடிவில் நாங்கள் தலையிட முடியாது என சொல்கிறது.

முதலில் எதில் தலையிடுவோம் என பட்டியல் வெளியிட வேண்டும். நீதிமன்றம் பிள்ளைகள் படிப்பில் தலையிடுகிறது. குடி (மதுபானம்) குறித்து பொது நல வழக்கு தொடர்ந்தால் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சொல்கிறது.

நாட்டில் பாராளுமன்றம், சட்டசபை, ஜனநாயகம் என்பது இப்போ வேடிக்கை ஆகிவிட்டது. ஏதாவது ஒரு பொது விவாதம் நடத்தப்பட்டு, நாட்டு மக்களின் நலனுக்காக எதும் சட்டம் இயற்றப்பட்டுள்ளதா?. நீட்டா, காவிரியா, முல்லை பெரியாறு என்று எதுக்கு வேணாலும் நீதிமன்றம் போக சொன்னால், எதற்கு பாராளுமன்றம் உள்ளது. சும்மா லோக்சபா, ராஜ்யசபா என்று பேசி கொள்கிறோம். எங்க லோக்சபா உள்ளது.

நீட் தேர்வு தரமான டாக்டர்களை உருவாக்காது. பல முறை கேள்வி எழுப்பி விட்டேன். இந்தியாவில் தரமான டாக்டர்களை உருவாக்க அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்தது எதற்கு?. நீட் தேர்வு தரமான டாக்டர்களை உருவாக்கும் என்றால் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வை நீக்கிவிடலாம். நாங்கள் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், போலீஸ் என அனைத்துக்கும் தேர்வு எழுதுகிறோம்.

நாட்டை ஆளும் பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர் எல்லாம் என்ன தேர்வு எழுதுகிறார்கள். நீங்களும் தேர்வு எழுதுங்க?. ஐபிஎஸ் உட்பட அனைத்து பதவிகளுக்கும் தகுதி தேவைப்படுகிறது. நம் நாட்டில் எந்த டாக்டரின் தரம் குறைந்து இருக்கிறது. மருந்துகளின் தரம் தான் குறைந்து இருக்கிறது. உ.பி மருத்துவமனையில் குளுகோஸ் பாட்டில் ஏத்துவதற்கு ஒரு ஸ்டாண்ட் இல்லை. தரையில் படுத்து இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like