1. Home
  2. தமிழ்நாடு

நவம்பர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குகிறது!

நவம்பர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குகிறது!


வடகிழக்கு பருவ மழை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட கிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் மாதம் மூன்றாவது வாரம் அல்லது நான்காவது வாரம் தொடங்கும். பெரும்பாலான ஆண்டுகளில் அக்டோபர் கடைசி வாராத்தில் துவங்கி பரவலாக நல்ல மழையை கொடுக்கும்.

இந்நிலையில் தற்போது வரை இந்திய - பசிபிக் கடற்பகுதியில் நிலவ கூடிய வெப்பநிலை காரணமாக தொடர்ந்து தென்மேற்கு திசையில் காற்று வீசும் சூழல் நிலவி வருகிறது,

மேலும் வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும்,வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்படவில்லை.

நவம்பர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குகிறது!

இதனால் வரும் 25 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை சற்று கால தாமதமாகியுள்ளது. இதனால், வரும் நவம்பர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல் நிலவி வருவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like