1. Home
  2. தமிழ்நாடு

நீலகிரி மலை ரயில் இன்று ரத்து செய்யபடுகிறது..! காரணம் இது தான்..!

1

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி காலை 7:10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்படுகிறது.  அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதியம் 2 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இதனால் உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர்.   இந்த மலை ரயில் பயணம் மூலம் நீலகிரி மலையின் இயற்கை எழிலை  சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம். 

train

இந்நிலையில் நீலகிரி மலை ரயில் போக்குவரத்து இன்று ரத்தாகியுள்ளது. கல்லார் அருகே பாறை உருண்டு தண்டவாளத்தில் விழுந்ததால், காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி சென்ற மலை ரயில் கல்லார் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பாறையை அப்புறப்படுத்தும் பணி தாமதமாகும் என்பதால் ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே புறப்பட்டது.

Trending News

Latest News

You May Like