1. Home
  2. தமிழ்நாடு

நாடு முழுவதும் 5 மாநிலங்களில் 22 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை..!

1

நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நேற்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீர், மராட்டியம், டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் 22 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

பயங்கரவாத சதித்திட்டம் பற்றிய விசாரணையின் முக்கிய முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடந்தது. இதில் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் என கூறப்படும் முக்கிய நபர்கள், நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், அடுத்து என்ன சதி திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன? அல்லது என்னென்ன தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன? என்பன உள்ளிட்ட விவரங்கள், முக்கிய சான்றுகள் ஆகியவற்றை சேகரிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

உள்நாட்டு பாதுகாப்பில் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்த சோதனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாட்டில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதனுடன் தொடர்பில் உள்ளவர்கள் பற்றி இந்த சோதனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like