அடுத்த அதிர்ச்சி சம்பவம்..! பெண்ணை கூட்டாக சேர்ந்து அடித்து இழுத்து சென்ற திருநங்கைகள்!
நெல்லை மாவட்டம் களக்காடு பெருமாள் கோயில் அருகில் கக்கன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் அந்தப் பெண். கணவர் மற்றும் இரு மகன்களைப் பிரிந்த தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், கேரளாவில் பணி புரியும் தனது மகன் புவனேஸ்வரனை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி ஒருவர் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இதைக் கேள்வியுற்ற அந்தப் பெண் அச்சிறுமியை தனியாக அழைத்துக் கண்டித்ததோடு, தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அந்தச் சிறுமி. பெண் தாக்கியதை தனது திருநங்கையான அண்ணன் இசக்கி பாண்டியிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமரைடந்த இசக்கி பாண்டி குலசேகரப்பட்டினத்திலிருந்து சக கூட்டாளிகளான திருநங்கைகளை வருமாறு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பை ஏற்று 3 திருநங்கைகள் வர அவர்கள் பெண்ணைத் தேடிச் சென்று தகராறு செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணைக் கம்பால் சரமாரியாக அடித்துத் தாக்கியதோடு, அவரது உடைகளைக் கிழித்து தரதரவென அப்பகுதி வழியாகத் தெருவில் இழுத்துச் சென்றுள்ளனர். இந்தக் காட்சியை அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய இசக்கி பாண்டி உள்ளிட்ட நான்கு திருநங்கைகளைத் தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம்குறித்து பேசிய பெண் காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்றும் தன்னிடம் கட்டாயப்படுத்தி சமாதானமாகப் போகுமாறு கையெழுத்து வாங்கியதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். திருநங்கைகள் பெண்மீது கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kalakkad police launched inquiry with transgenders after a video showing them attacking a woman went viral. The woman allegedly beat a minor girl. The incident took place on Friday. Inquiry is on. pic.twitter.com/HGRRypH3K9
— Thinakaran Rajamani (@thinak_) January 5, 2025