1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த அதிர்ச்சி... MBBS மாணவி தாய் பலாத்காரம்...!

1

கொல்கத்தாவில் ஜூனியர் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொடூரமாக கொலை செய்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவமனை தொடர்பான மற்றொரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்து பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் இரண்டு பெண் நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டு பெண் நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார் . மருத்துவ மாணவி ஒருவரின் தாய் மற்றும் அத்தையை மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, MBBS மாணவர்கள் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரை கொடூரமாக தாக்கியதில், மருத்துவர் தற்போது ஐசியூவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .

ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருதயவியல் பிரிவில் மூத்த குடியுரிமை மருத்துவராக பணிபுரிந்து வரும் தில்பாக் சிங் தாக்கூர் தற்போது முதுகலைப் படிப்பைத் தொடர்ந்து வருகிறார். 

இந்நிலையில், 32 வயதான மருத்துவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கற்பழிப்பு சம்பவத்தை செய்துள்ளார். இதயம் தொடர்பான நோயைப் பரிசோதிக்க இரண்டு பெண்கள் தில்பாக் சிங்கை அணுகிய போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த இரு பெண்களும் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியின் தாய் மற்றும் அத்தை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும், மருத்துவ மாணவர்கள் தில்பாக்கை கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு அவரை ஐசியூவில் சேர்க்க வேண்டியதாயிற்று.

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை சம்பவத்திற்கு பிறகு ஒரு புறம் பல மருத்துவர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவரே நோயாளிகளை பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே உள்ள நம்பிக்கை தொடர்பில் பல கேள்விகளை எழுப்புகிறது. 

போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, ஆகஸ்ட் 11 ஆம் தேதி, இரண்டு நோயாளிகள் எஸ்சிபி மருத்துவக் கல்லூரியின் இருதயவியல் பிரிவுக்கு ஈசிஜிக்காகச் சென்றனர். அங்கு பணிபுரியும் மருத்துவர் அவர்களை பலாத்காரம் செய்தார். இது குறித்து இரு நோயாளிகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பிறகு, ஆதாரங்களின் அடிப்படையில் மேலும் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். டாக்டரை தாக்கிய விவகாரம் குறித்து, தங்களுக்கு தெரியும் என்றும், இது தொடர்பாக புகார் வந்தால் விசாரிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like