1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி..!! உப்பு விலை பல மடங்கு உயரப்போகிறது..!!

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி..!! உப்பு விலை பல மடங்கு உயரப்போகிறது..!!


கோடை காலத்தில் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 1.500 ரூபாயாக இருந்த ஒரு டன் உப்பு 5,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் 7 லட்சம் இருப்பு வைக்க வேண்டிய இடத்தில் 15,000 டன் உப்பு மட்டுமே இருப்பில் உள்ளது. இதனால் உப்பளங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி மீண்டும் முழு வீச்சில் உப்பு உற்பத்தியை தொடங்கும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் உற்பத்தி செய்த உப்பு மீண்டும் மழை பெய்து நனையாமல் இருப்பதற்காக தார் பாய் போட்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like