1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு அடுத்த ஷாக்..! விரைவில் தமிழகத்தில் முக்கிய மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள்..!

1

தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கவும், பராமரிக்கவும், நிர்வகிக்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் செயல்படுகிறது. அதுபோல், தமிழகத்தில் முக்கிய மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கவும், பராமரிக்கவும் மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதா நேற்று முன்தினம்சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த மசோதா விவாதத் தின்போது, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘‘சுங்கச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது. ஆணைய பரிந்துரை, பொதுமக்களின் கருத்துகளை பெற்ற பிறகே முடிவு எடுக்கப்படும். பாலம், சாலைகள் அமைப்பதற்கு நிதி இல்லாததால் ஆணையம் அமைத்து திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்’’ என்றார்.

ஆனால், மதுரையில் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சுற்றுச் சாலை (ரிங் ரோடு)யில், ஏற்கெனவே வண்டியூர், சிந்தாமணி, வலையங்குளம் ஆகிய இடங்களில் சுற்றுச் சாலைகள் அமைத்து சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

அதனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போல், மாநில நெடுஞ்சாலை ஆணையமும் அமைக்கப்பட்டால், இனி மதுரையைப் போல் மாநிலத்திலுள்ள மற்ற மாநில நெடுஞ்சாலைகளிலும் ‘சுங்கச் சாவடிகள்’ அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச் சாவடிகள் அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில்தான் புதிய நெடுஞ்சாலைகளை அமைக்கிறது. மத்திய அரசு வாகன விற்பனை மற்றும் பதிவின் போது சாலை வரி வாங்காததாலேயே, சுங்கக் கட்டணம் வசூல் செய்கிறது.

ஆனால் மாநில அரசு புதிய வாகனங்கள் பதிவு செய்யும்போதே சாலை வரியையும் உரிமையாளர்களிடமிருந்து வசூ லிக்கிறது. அதனால் மீண்டும் மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்க தனியாக சுங்கக் கட்டணம் வசூ லிப்பது எப்படி சரியாகும்? என வாகன உரிமையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like