1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு அடுத்த ஷாக்..! இன்று முதல் 40 சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது..!

1

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1ம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும். அந்தவகையில், மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கையை ஏற்கனவே அனுப்பியிருந்தது.

அந்த அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடி, திண்டிவனம்-ஆத்தூர், நெல்லூர், நாங்குநேரி, சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி, பள்ளிக்கொண்டா, புதுக்கோட்டை-வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, வானகரம், சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், இந்த கட்டணம் தொடர்பான அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது..

- வண்டலூர்- மீஞ்சூர் வரை கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.140 கட்டணம்.

- இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ.225 கட்டணம் 

- லாரி, பஸ்கள் ரூ.470 மற்றும் 3 அச்சு வணிக வாகனங்களுக்கும் ரூ.510 ரூபாய் வரை கட்டணம் 

- 4 முதல் 6 அச்சு கனரக கட்டுமான வாகனங்களுக்கு ரூ.735 மற்றும் 7 முதல் அதற்கு மேல் அச்சு உள்ள வாகனங்கள் ரூ.895 கட்டணம் 

- நெமிலிச்சேரி வரை கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20 கட்டணம் 

- இலகுரக வணிக வாகனம் ரூ.40. லாரி, பஸ்கள் ரூ.85, 3 அச்சு கனரக வாகனங்களுக்கு ரூ.90. ரூ.130, ரூ.160 கட்டணம் 

- பாடியநல்லூர்- மீஞ்சூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.15, லாரி, பஸ்கள் ரூ.75, இதர கனரக வாகனங்களுக்கு ரூ.80, ரூ.115, ரூ.140 கட்டணம்.அனுமதிக்கப்பட்ட சுமையின் எடைக்கு அதிகமாக சரக்கு ஏற்றி வரும் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலிருந்து 10 மடங்கு கட்டணம்

தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை மூடவேண்டும். எனினும், கடந்த 2 வருடங்களில் புதிதாக 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளது.. காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடுவதற்கு பதிலாக, புதிதாக சுங்கச்சாவடிகளை திறந்து, அதற்கு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது, தமிழக வாகன ஓட்டிகளுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Trending News

Latest News

You May Like