மக்களுக்கு அடுத்த ஷாக்..! இன்னும் ஒரு வாரத்திற்கு வெயில் வறுத்தெடுக்கும்..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நீலகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. ஆனால் சமவெளிப் பகுதிகளில் தொடர்ந்து வெப்பத் தாக்கம் அதிகமாக உள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்கள் புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது செப்., 23 வரை நீடிக்கும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று இயல்பைவிட 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும். வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பால் வெப்பத் தாக்கம் கடுமையாக இருக்கும். வெளியில் செல்வோருக்கு உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னையில் பகல் நேரத்தில் 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது 39 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.