மக்களுக்கு அடுத்த ஷாக்..! பிரியாணி அரிசி விலை அதிரடி உயர்வு..!
கோவை மொத்த வியாபாரிகள் சந்தையில், ஒரு கிலோ துவரம் பருப்பு 120 ரூபாய்க்கு, உருட்டு உளுந்து 130, பாசிப்பருப்பு 110, நல்லெண்ணெய் ஒரு லிட்டர் 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதுவரை, 180 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் 465 ரூபாய்க்கும், 120 ரூபாயாக இருந்த பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் சீரக சம்பா அரிசி 220 ரூபாயாகவும், 200-250க்கு விற்பனையான மஞ்சள் திராட்சை, 550 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
கோவை மாவட்ட மளிகை பொருட்கள் வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகர் கூறுகையில், ''மேற்கு வங்கத்தில் அதிக மழை பெய்வதால், மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு சீரக சம்பா அரிசி, ஒரு கிலோ 220 ரூபாயாக அதிகரித்துள் ளது. நாக்பூர் பகுதியில் பெய்யும் மழை காரணமாக, மஞ்சள் திராட்சை விலை 550 ரூபாயாகியுள்ளது.
தேங்காய் எண்ணெய் சில மாதங்களாகவே, அதிக விலைக்கு விற்பனையாகி வருகிறது. அடுத்த சில மாதங்களுக்கு தேங்காய் எண்ணெய் விலை குறைய வாய்ப்பில்லை. தற்போது, ஒரு லிட்டர் 465 ரூபாய்க்கு விற்பனையாகிறது,'' என்றார்.