1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு அடுத்த ஷாக்..! விலை கிடுகிடுவென உயர்ந்தது..!

1

பருப்பு என்பது தற்போது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இனி வரும் நாட்களில் பருப்பின் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் ரூ.122.67 லட்சம் ஹெக்டேர்களில் இருந்து 121.61 லட்சம் டன்கள் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் பருவமழை காரணமாக அறுவடைக்கு தயாரான பயிரின் சமீபத்திய இழப்புகள் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

கர்நாடகாவில் பூஞ்சைகளின் தாக்குதல் காரணமாக விளைச்சலில் 30 சதவிகிதம் குறைந்துள்ளது. எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாமல் குறைந்த அளவில் விளைச்சல் ஏற்பட்டதனால் மூங், மசூர், துவரை மற்றும் உளுந்து போன்ற பருப்புகள் கிலோ ரூ. 130-140 க்கு மேல் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சமையல் எண்ணெயின் விலை உயர்ந்து ஏழை எளிய மக்களை மிரட்ட வருகிறது. மொத்த உற்பத்தி பகுதியான விருதுநகரில் கிலோவுக்கு ₹10 முதல் ₹30 வரை எண்ணெய் விலை உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடலை எண்ணெய் 15 கிலோ ₹2,780, நல்லெண்ணெய் 15 கிலோ 6,765, பாமாலின் 15 கிலோவிற்கு ரூ. 25 உயர்ந்து 1415 ரூபாய் என மொத்த விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இது அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களை வெகுவாக பாதித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like