மக்களுக்கு அடுத்த ஷாக்..! பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் கிடுகிடு உயர்வு..!
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது.
இதுதொடர்பாக நிர்மலா சீதாராமனின் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிப்பில், ‛‛Crude வகை சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் மீதான அடிப்படை சுங்க வரி பூஜ்ஜியத்தில் இருந்து 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த 3 வகையான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் இறக்குமதி வரி என்பது 12.5 சதவீத்தில் இருந்து 32.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு என்பது நேற்று வெளியானது. இந்த வரி உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. நம் நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் இந்த முடிவு என்பது எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் சோயாபீன் விவசாயிகள் அதிகம் உள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மகாராஷ்டிரா விவசாயிகளை மனதில் வைத்து இந்த இறக்குமதி வரி என்பது அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது நம் நாட்டில் சமையல் எண்ணெய்க்கான எண்ணெய் வித்துகள் குறைந்த அளவில் கிடைக்கின்றன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதேவேளையில் பொதுமக்கள் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெயை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்கும் பட்சத்தில் வெளிநாடுகளில் இருந்து நமக்கு வரும் பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெயின் அளவு குறையும்.