மக்களுக்கு அடுத்த ஷாக்..! 'கிடுகிடு' உயர்வு; ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்தை தாண்டியது..!
தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 15), தங்கம் கிராம், 8,720 ரூபாய்க்கும், சவரன், 69,760 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 16) தங்கம் விலை கிராமுக்கு, 95 ரூபாய் உயர்ந்து, 8,815 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 760 ரூபாய் அதிகரித்து, 70,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 17) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ. 105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,920க்கு விற்பனை ஆகிறது.
தங்கம் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்தை கடந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
.png)