மக்களுக்கு அடுத்த ஷாக்..! இனி முன்பதிவு செய்வதற்கான காலம் 60 நாளாக குறைப்பு..!

நீண்ட தூரம் பயணிக்கும் மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர், தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளுக்கு தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர் தொடர் விடுமுறை விடப்படுவதினால் குடும்பத்துடன் மக்கள் தங்கள் சொந்த ஊரில் பொழுதே கழிக்க திரும்புவதால் பேருந்து ரயில் என அனைத்திலும் கூட்ட நெரிசல் ஏற்படுகின்றது.ஐஆர்சிடிசி இணையதளத்தில் நான்கு மாதங்கள், அதாவது 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்நிலையில், ரயில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான காலம், 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைத்து ரயில்வே வாரியம் உத்தரவு. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இருப்பினும் அக்டோபர் 31ம் தேதி வரை முன்பதிவு செய்வதற்கான காலம் 120 நாட்கள் என அமலில் இருக்கும்.
வெளிநாட்டு பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற கால அளவில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது