1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு அடுத்த ஷாக்..! சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு..!

1

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் வரி ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும் என்ற நிலையில், 6 மாதத்துக்குள் ரூ.21 ஆயிரம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 

ஆனால் ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு தொழில் வரி ரூ.135-ல் இருந்து ரூ.180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.30,001 முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.425 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் ரூ.45,001 முதல் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.690-க்கு பதிலாக ரூ.930 தொழில் வரி கட்ட வேண்டும் என்றும், ரூ.60,001 முதல் ரூ.75 ஆயிரம் வரையில் வருமானம் உள்ளவர்களும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களும் பழைய வரியை கட்டினால் போதும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
 

இந்த வரி உயர்வுக்கு மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், இந்த அரையாண்டு உயர்த்தப்பட்ட வரி உயர்வு அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like