1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு அடுத்த ஷாக்..! இனி கிளாம்பாக்கம் வரை மட்டும் தான் தென் மாவட்ட பேருந்துகள்..!

1

தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம், வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் வரும் செவ்வாய்க்கிழமை முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
 

அதன் காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்போது 80 வழிதடங்களில் சுமார் 589 பேருந்துகள் 3795 பயண நடைகள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயண நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் மாநகரப் போக்குவரத்து சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். சென்னையில் எப்போது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த காணப்படுகின்றது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் மெட்ரோ ரயில் சேவை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டது. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் என்பது குறைவதே கிடையாது.அதனால் தற்போது தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளனர். இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், பயணிகள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது. அதில்,"தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் போக்குவரத்து காவல்துறை வழங்கியுள்ள பரிந்துரைப்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் மார்ச் 4-ம் தேதி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இதையொட்டி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளின் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள், 3795 நடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் கூடுதலாக 104 பேருந்துகள் 815 நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like