1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு அடுத்த ஷாக்..! இனி ரூ.1000 இல்லை ரூ. 5000 அபராதம்!

1

மார்ச் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படுகிறது? சாலை விதிகளை மீறினால் என்னென்ன தண்டனை கிடைக்கும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது: பெரும்பாலான விபத்துகளுக்கு முதன்மை காரணமாக இருப்பது இதுதான். இந்த குற்றத்திற்கு அபராதமாக இதற்கு முன்னர் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த அபராதத் தொகை ரூ.10,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு 6 மாத சிறை தண்டனையும் இதற்கு விதிக்கப்படலாம். ஒரு வேலை நீங்கள் மீண்டும் மீண்டும் இதே குற்றத்தை செய்து படிபட்டால் அதற்கான அபராதம் 15,000 ரூபாயாக இருக்கும். அதோடு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடலாம்.

ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது: இதற்கு முன்னர் ஹெல்மெட் இல்லாமல் பைக் அல்லது ஸ்கூட்டர் ஓட்டினால் அதற்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த அபராதம் 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யும் அபாயமும் ஏற்படலாம்.

சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது: சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவதற்கு இதற்கு முன்னர் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் புதிய விதிகளின் கீழ் இந்த அபராதம் 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவது பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த தவறுகளில் ஈடுபடுபவர்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும், இதன் முந்தைய அபராதம் ரூ. 500 ஆக இருந்தது. இந்த மாற்றம் கவன சிதைவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. 

லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்: லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் இதற்கு முன்னர் 500 ரூபாய் அபராதம். ஆனால் தற்போது இந்த அபராதம் ரூ. 5000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 200 முதல் 400 ரூபாய் அபராதம் இதற்கு முன்னர் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது இது 2000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் இதே குற்றங்கள் நடந்தால் அபராதம் ரூ.4,000 ஆக இரட்டிப்பாகும். மேலும், செல்லுபடியாகும் மாசு சான்றிதழை வைத்திருக்கவில்லை என்றால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும், இது சாலை பாதுகாப்புடன் சுற்றுச்சூழல் தரத்தை பராமரிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

இருசக்கர வாகனத்தில் அதிக நபர்களுடன் பயணிப்பது: இரு சக்கர வாகனத்தில் சில இளைஞர்கள் நான்கு அல்லது ஐந்து பேரை ஏற்றுக் கொண்டு செல்வதை பார்த்திருப்போம். இந்த குற்றத்திற்கு இதற்கு முன்னர் 100 ரூபாய் அபராதம் ஆனால் தற்போது 1,000 ரூபாயாக இந்த அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது: பொறுப்பில்லாமல் வாகனம் ஓட்டி பந்தயம் வைத்துக் கொண்டு வேகமாக செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் 5000 ரூபாய் அபராதம். 

 மேலும், அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்வது, உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய கடுமையான குற்றமாகும். இதற்கு ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும். கூடுதலாக, சிக்னல் ஜம்பிங்கிற்கு இப்போது ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படுகிறது, அதே நேரத்தில் அதிக பாரம் ஏற்றும் வாகனங்களுக்கு ரூ. 20000 அபராதம் விதிக்கப்படும். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ. 25000 அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதங்கள் அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகளை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

Trending News

Latest News

You May Like