மக்களுக்கு அடுத்த ஷாக்..! இனி தலைநகரில் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது..!

தலைநகரில் காற்று மாசுபாட்டை குறைக்க பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் சி.என்.ஜி. வாகனங்களை கண்டுபிடிப்பதற்காக பெட்ரோல் பங்க்குகளில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும் பணி தொடங்கப்பட்டது.
இதனிடையே ஏப்ரல் 1ம் தேதி முதல் எரிபொருள் மறுக்கும் திட்டத்தை தொடங்க பாஜக அரசு திட்டமிட்ட நிலையில் அதனை செயல்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் முழுமையாக பணியை முடித்த பின் இந்த மாத இறுதியில் இருந்து பெட்ரோல், டீசல் வழங்க தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்
.டெல்லியில் மொத்தம் 500 பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. நிலையங்கள் உள்ளன. இவற்றில் 372 பெட்ரோல் பங்க்குகளிலும், 105 சி.என்.ஜி. நிலையங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள நிலையங்களில் விரைவில் கேமராக்கள் பொருத்தப்பட்ட பின் திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் பங்க்-குகளில் ஒரு கருவியை பொருத்த உள்ளனர். அது 15 வருடங்கள் பழமையான வாகனங்களை அடையாளம் காண உதவி செய்யும். அதன்பின்பு அந்த வண்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது.