1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு அடுத்த ஷாக்..! இனி தமிழகத்தில் புதிய வீடுகளின் விலை உயரும்!

1

அண்மையில் கட்டுமானத் துறையின் கோரிக்கையை ஏற்று சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அண்மையில் தொடங்கியது.

அதன்படி 2500 சதுர அடி வரையிலான மனையில் 3500 சதுர அடி வரையில் வீடு கட்ட (மேல் தளமும் இருந்தால் இந்த 3500 சதுர அடி கணக்கு வரும்) சுயசான்று அடிப்படையில் ஆன்லைன் வழியாக உடனடியாக கட்டட அனுமதி வழங்கப்படும். இந்த திட்டத்தில் கட்டட அனுமதி வழங்க சென்னையில் ஏற்கெனவே இருந்த விகிதங்கள் அடிப்படையில் சதுர அடிக்கு 56 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என சென்னை மாநகராட்சி பரிந்துரைத்தது.

இதற்கான வரைவு அறிக்கை நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் நகராட்சி நிர்வாகத் துறையும் ஊரக வளர்ச்சி துறையும் வெளியிட்ட புதிய கட்டண விகிதங்கள் இதற்கு மாறாக இருந்தன. சென்னை மாநகராட்சியில் சதுர அடிக்கு ரூ 100 , பிற மாநகராட்சிகளில் எல்லாம் ஒரு சதுர அடிக்கு 74 ரூபாய் முதல் ரூ 88 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

அது போல் நகராட்சிகளில் 70 ரூபாய் முதல் 74 ரூபாய் வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. பேரூராட்சிகளில் சதுர அடிக்கு 45 முதல் 70 ரூபாய் வரையும் ஊராட்சிகளில் சதுர அடிக்கு 15 முதல் 27 ரூபாய் வரையும் அறிவிக்கப்பட்டன.  உள்ளாட்சி அமைப்புகளில் 3500 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்குதான் புதிய கட்டணம் என பலரும் நினைத்தனர். ஆனால் ஒற்றை சாளர முறையில் கட்டட அனுமதி வழங்குவதற்கான கட்டணங்களையும் மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 3500 சதுர அடிக்கு மேல் கட்டட அனுமதி கட்டணங்களில் மாற்றம் வந்துள்ளது. ஏற்கெனவே 8900 சதுர அடி கட்டடத்திற்கு அனுமதி வாங்க ரூ 4.5 லட்சம் செலுத்தி வந்த நிலையில் தற்போது இரு மடங்காக ரூ 9.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டியது உள்ளது.

இதனால் புதிதாக கட்டண அனுமதி பெற விண்ணப்பிப்போர் இரு மடங்கு கட்டணத்தை செலுத்தும் நிலை உள்ளது. இந்த கட்டணத்தை கட்டுமான நிறுவனத்தினர் வாடிக்கையாளர்களிடம் இருந்தே வசூலிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் வீடுகளின் விலை உயரக் கூடும் என தெரிகிறது. 

புதிய கட்டண விவரம்

இந்த 9.5 லட்சம் ரூபாய் குறித்த பிரேக் அப்பில் கட்டட உரிம கட்டணம் ரூ.1,45,400, வளர்ச்சி கட்டணம் ரூ.17,600, உள்கட்டமைப்பு கட்டணம் ரூ.3,07,500, இதர வரைப்பட கட்டணம் ரூ.1,050, கழிவு நீர் வடிகால் சாலை வெட்டு ரூ.34,400, தண்ணீர் இணைப்பு சாலை வெட்டு ரூ.25,800, மின் இணைப்பு சாலை வெட்டு ரூ.25,800, சரி பார்ப்பு கட்டணம் ரூ.100, காப்புத் தொகை ரூ.1,64,100, விளம்பர பலகை கட்டணம் ரூ.1500, தொழிலாளர் நல வாரியம் ரூ.2,30,900 என மொத்தம் ரூ.9,54,150 வசூலிக்கப்படும்.

Trending News

Latest News

You May Like