1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : மக்களுக்கு அடுத்த ஷாக்..! சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

Q

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களை உள்ளடக்கி தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகளிலிருந்து கேஸ் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் கேஸ் கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்தந்தத்தின் அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர். 

 

இந்நிலையில் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்‌தத்தில் ஈடுபட‌ ‌உள்ளதாக தென்ம‌ண்ட‌ல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும் நிலை உள்ளது.

 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி, நாளை முதல் எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட தென் மாநிலங்கள் முழுவதும் இந்த ஸ்டிரைக் நடைபெறுகிறது. இதனால், கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like