1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு அடுத்த ஷாக்..! சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகள் 98% நிரம்பின..!

1

சென்னையை புரட்டி போடும் மிக்ஜாம் புயல்... கனமழையால் ஏரிகள் நிரம்பி வருகின்றன. 

செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஏரியின் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீரின் வரத்து அதிகரித்து தற்போது விநாடிக்கு 10,000 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை விநாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.தொடர்மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 278 ஏரிகள் நிரம்பியுள்ளதாகவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 177 ஏரிகள் முழுகொள்ளவை எட்டியுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகள் 98% நிரம்பியதால் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆலோசனை தொடர்ந்து அனைத்து ஏரிகளையும் கண்காணிக்க அமைச்சர் அறிவுறுத்தல், ஆறு, ஏரிகளின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like