மக்களுக்கு அடுத்த ஷாக்..! இனி ஏடிஎம்மில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் 23 ரூபாய் கட்டனும்..!

கடந்த காலங்களில் ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் வங்கிக்கு சென்று சில படிவங்களை பூர்த்தி செய்து பணம் அனுப்ப வேண்டும். இதற்கு மிகுந்த காலதாமதம் ஆகும். ஆனால் தற்போது நெட் பேங்கிங், யூபிஐ வசதிகள் மூலம் நினைத்த நேரத்தில் நினைத்த நபர்களுக்கு உடனடியாக பணத்தை அனுப்பி விட முடியும். அதே நேரத்தில் யுபிஐ வந்துவிட்ட பிறகு பணம் புழக்கம் மக்களிடையே வெகுவாக குறைந்து இருக்கிறது. டீக்கடைகள் தொடங்கி மிகப்பெரிய நிறுவனங்கள் வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் மத்திய அரசும் மக்களிடையே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது வரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. ஆனாலும் சிலர் இன்னும் ஏடிஎம்களின் பணத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு முறை வகையில் அவர்களுக்கு பயனுள்ளதாகவும் சுலபமாகவும் இருப்பதாக கருதுகிறார்கள்.
இந்த நிலையில் அதற்கு கட்டுப்பாடு இருக்கும் வகையில் புதிய நடைமுறை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வர இருக்கிறது. தற்போது வங்கிகளில் பணம் எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஒரு நாளைக்கு 20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் எடுத்துக் கொள்ளலாம். பிற வங்கிகளில் அதற்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. மாதத்தில் ஐந்து முறை வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் இலவசமாகவும், பிற வங்கிகளில் மூன்று முறை கட்டணம் இன்றியும் பணம் எடுத்துக் கொள்ளலாம். சில வங்கிகள் 8 முறை வரை கட்டணமில்லா பணப்பரிவினை வழங்குகின்றன.
அதற்கு மேல் செல்லும்போது இருபது ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கட்டணத்தை தான் மத்திய நிதியமைச்சகம் உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒரு முறைக்கு 23 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். பிற வங்கிகளில் மூன்று முறைக்கு மேல் பணம் எடுக்கும் போது ஒரு பரிவர்த்தனைக்கு 23 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.