1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு அடுத்த ஷாக்.! Paytm FASTag களை ரத்து செய்த நெடுஞ்சாலை ஆணையம்..?

1

ஒரே பாஸ்ட் டாக்கை ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி பயன்படுத்தப்படும் பழைய பாஸ்ட் டாக்குகள் பிப்ரவரி 29க்குப் பிறகு செயலிழக்கச் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இன்னொரு பக்கம் பேடிஎம் மூலம் பலரும் பாஸ்ட் டாக் வாங்கி உள்ளனர். ஆனால் பேடிஎம் தற்போது ஆர்பிஐ மூலம் பிளாக் செய்யப்பட்டு உள்ளது. பிப்ரவரி 29 வரை மட்டுமே இதற்கு டைம். அதோடு இல்லாமல்.. பேடிஎம் யுபிஐ சேவையும் கூட செயல்படாமல் போகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், FASTags சேவை வழங்கும் வங்கிகளின் பட்டியலில் இருந்து Paytm Payment Bank நீக்கப்பட்டுள்ளதால், அதன் வாயிலாக வாங்கப்படும் FASTags இனி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி தங்களால் அங்கீகரிக்கப்பட்ட இதர 32 வங்கிகள் வழங்கும் FASTags களை மட்டுமே வாங்குமாறு சாலை உபயோகிப்பாளர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.Paytm FASTagsஐ பெற்றவர்கள் NH நெட்வொர்க்கில் தொந்தரவு இல்லாத பயணத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து புதிய FASTagsயை வாங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளன.இதனால் Paytm Payments Bank-ன் FASTags களை பயன்படுத்தி வரும் சுமார் இரண்டு கோடி பேர் வேறு வங்கிகளில் இருந்து புதிய ஸ்டிக்கர்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like