மக்களுக்கு அடுத்த ஷாக்..! 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம்..!

போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது.
அந்த வகையில், கடந்த 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், பவுனுக்கு ரூ.74,560 என விற்பனையானது.
அதன் பின்னர் 21-ந் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வருகிறது. இந்த சூழலில் நேற்றும் தங்கத்தின் விலை குறைந்தது.
அதன்படி, கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,915-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.71,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று(ஜூலை 1) சவரனுக்கு ₹840 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,020-க்கும், சவரன் ₹72,160-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், மாதத்தின் முதல்நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.