மக்களுக்கு அடுத்த ஷாக்..! ஒரே நாளில் 2வது முறையாக ஆபரணத் தங்கம் விலையில் மாற்றம்..!

கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி ரூ.64,600 ஆக உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்தது. கடந்த 26 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்தது. கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.64,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.8,010-க்கு விற்பனையானது.
பிப்ரவரி 28 ஆம் தேதி 1 கிராம் தங்கம் விலை ரூ.50 குறைந்து ரூ.7,960 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.63,680 ஆகவும் விற்பனையானது. மார்ச் 1 ஆம் தேதி சவரனுக்கு மேலும் ரூபாய் 160 குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ரூ. 7940க்கு விற்பனை செய்யப்பட்டது.
மார்ச் 2 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையும், மார்ச் 3 ஆம் தேதி திங்கட்கிழமையும் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. அண்மைக் காலமாக வரலாறு காணாத உச்சங்களைத் தொட்டு வந்த தங்கம் விலை, 5 நாட்களில் மட்டும் ரூ.1080 அளவுக்கு குறைந்தது.
இந்நிலையில், மார்ச் 4 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,010க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று (மார்ச் 5) சவரனுக்கு ரூபாய் 440 உயர்ந்தது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 64,520க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து 8,065க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று ஒரே நாளில் 2 முறை மாற்றம்
இந்நிலையில், தங்கம் விலை இன்று (மார்ச் 7) காலை சவரனுக்கு ரூபாய் 360 சரிந்தது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 64,160க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ரூ45 குறைந்து ரூபாய் 8,020க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.106.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை தங்கம் சவரனுக்கு ரூ.260 குறைந்த நிலையில் தற்போது ரூ.320 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,060-க்கும், ஒரு சவரன் ரூ.64,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் குறைந்த தங்கம் விலை அடுத்த 3 மணி நேரத்தில் உயர்ந்ததால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.