மக்களுக்கு அடுத்த ஷாக்..! தங்கம் சவரன் விலை ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..!
தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் சற்று வேகம் குறைந்த நிலையில், நேற்று ஒரே நாளில் எகிறி, மீண்டும் உயருவதற்கான அச்சாரத்தை போட்டு இருக்கிறது. நேற்று கிராமுக்கு ரூ.105-ம், பவுனுக்கு ரூ.840-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 285-க்கும், ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் நேற்று கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.128-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.760 அதிகரித்து ஒரு பவுன் ரூ.75,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,380-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.129-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
23.07.2025 ஒரு சவரன் ரூ.75,040 (இன்று)
22.07.2025 ஒரு சவரன் ரூ.74,280 (நேற்று)
21.07.2025 ஒரு சவரன் ரூ. 73,440
19.07.2025 ஒரு சவரன் ரூ. 73,360
18.07.2025 ஒரு சவரன் ரூ. 72,880