மக்களுக்கு அடுத்த ஷாக்..! மின் கட்டணம் உயர போகுதாம்..! வெளியான 'பகீர்' தகவல்!

"SEPC power limited என்ற தனியார் மின் உற்பத்தி நிலையம் 525 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், தூத்துக்குடியில் தனது உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது. இந்த உற்பத்தி நிலையத்தின் அதிகபட்ச மூலதன செலவு 3,514 கோடி ரூபாய் என்ற நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் நிறுவனம் ஏற்படுத்திய காலதாமதத்தினால் நிறுவனத்திற்கு கூடுதல் செலவு ஏற்பட்டு விட்டதாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 3,511 கோடி ரூபாயை கடந்து, கூடுதலாக 1,869 கோடி ரூபாயை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் SEPC என்ற தனியார் மின் உற்பத்தி நிலையம் கேட்டு உள்ளது.
இதில் 1,126 கோடி ரூபாயை செலவழிக்காமலேயே, இந்த தொகையை மூலதன செலவில் சேர்த்து தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் SEPC நிறுவனம் தெரிவித்துள்ளது. மறைமுகமாக தெரிவித்துள்ள இந்த தொகையை, மக்கள் தலையில் சுமத்தி ஆண்டுக்கு 11,000 கோடி ரூபாயை வசூலிக்கும் விதமாக மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
பொதுமக்களிடம் எவ்வித கருத்துக்களையும் கேட்காமல் இது போன்ற மின்கட்டண உயர்வு நடவடிக்கையை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே இதனை மக்கள் அனைவரும் ஒன்று கூடி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேள்வி எழுப்ப வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.