மக்களுக்கு அடுத்த ஷாக்..! ஆட்டோ கட்டணம் உயர்கிறது..!

பிப். 1ம் தேதி முதல் ஆட்டோ பயணக் கட்டணம் உயர்கிறது. அதன்படி, முதல் 2 கிமீக்கு ரூ.50. அடுத்த ஒவ்வொரு கிமீக்கும் ரூ.18 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2013ம் ஆண்டு கட்டண நிர்ணயம் செய்த பிறகு கட்டணம் மாற்றி அமைக்கப்படாத நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கமே கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது.