மக்களுக்கு அடுத்த ஷாக்..! வரும் மார்ச் 19ஆம் தேதி 60% ஆட்டோக்கள் இயங்காது!

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் செயல் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு மீட்டருக்கு 25 அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 12 என ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்படுகின்றது.
ஆனால் அந்த ஆட்டோ கட்டணத்தை தற்போது வரை அரசு உயர்த்தவில்லை 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விலைவாசி உயர்வு ஏற்பட்ட நிலையில் மீட்டர் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆட்டோ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் 1.5 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும் அடுத்தடுத்து வரும் கிலோ மீட்டருக்கு 25 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
திமுக அரசும் தேர்தல் அறிக்கையின் பொழுது மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைப்போம் என்று கூறியிருந்தது. ஆனால் தற்போது வரை கட்டணத்தை மாற்றம் செய்யவில்லை. மேலும் கார்ப்பரேட் போக்குவரத்து நிறுவனங்கள் சட்ட விரோதமாக 1.8 கிலோ மீட்டருக்கு 76 ரூபாய் வசூல் செய்யப்படும் நிலையில் அத்தகைய நிறுவனத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளனர்.
புதிய ஆட்டோக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அரசு மானியம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியும் தற்போது வரை நிறைவேற்ற கிடையாது. மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொழிற்சங்கங்கள் இணைந்து வரும் மார்ச் 19ஆம் தேதி காலை 6:00 மணி முதல் மாலை ஆறு மணி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். சென்னை நகரில் மட்டும் இயங்கும் சுமார் ஒரு லட்சம் ஆட்டோக்கள் 60% இந்த போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது