இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி..! மலை காய்கறிகள் விலையும் அதிரடி உயர்வு..!
தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் ஒன்றாக இருக்கக்கூடிய தக்காளியின் விலை 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்று வருவது பலத்தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பல்வேறு அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியில் சுற்றுலா முக்கியமாக உள்ளது. கொடைக்கானலை சுற்றி ஏராளமான மலை கிராமங்கள் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஆங்கில காய்கறிகள் வரத்து குறைவால் மலை காய்கறிகளின் விலை ஏற்றத்தை கண்டுள்ளது. மொத்த வியாபாரத்தில் பீன்ஸ் 100 ரூபாய்க்கும் , கேரட் 70 ரூபாய்க்கும் , பீட்ரூட் , முள்ளங்கி உள்ளிட்டவை 50 ரூபாய்க்கு மேல் விற்பனை அடைந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புருக்கோலிக்கு கடந்த சில வாரஙகளுக்கு முன்புவரை, ஒரு கிலோ ரூ.80 முதல் 100 வரை கொள்முதல்விலை கிடைத்து வந்தது. தற்போது ரூ.100 முதல் 130 வரை கொள்முதல் விலை அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும், ஒரு சில இடங்களில் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் நோய் தாக்குதலின் காரணமாக வரத்து குறைந்து உள்ளதாகவும்.இதுவரை இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் மலை காய்கறிகள் விலையில் ஏற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்