1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த அதிர்ச்சி! தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர் கைது!!

அடுத்த அதிர்ச்சி! தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர் கைது!!


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 55 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, வழிமறித்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 43 மீனவர்களுடன், 6 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்துச் சென்றனர்.

அவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. கைதுக்கு மீனவ சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன.

அடுத்த அதிர்ச்சி! தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர் கைது!!

அதே போல் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தலைமன்னார்- தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்குவந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து 12 மீனவர்களை கைது செய்தனர்.

அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் சிறை பிடித்து இழுத்துச்சென்றனர். இதையடுத்து 12 மீனவர்களையும் மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தினர். அடுத்தடுத்து 55 மீனவர்கள், 8 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

அடுத்த அதிர்ச்சி! தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர் கைது!!

இந்நிலையில் தற்போது மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களில் மட்டும் 69 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like