அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான்! புதிய தலைமுறை அதிரடி சர்வே!
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி அமையும் என புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் புதிய தலைமுறை சார்பில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பல்வேறு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. அதன் முடிவில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என்பது தெரியவந்துள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும் மக்களின் பதில்களில் வெளியான முடிவுகளும் பின்வருமாறு:
தமிழகத்தில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?
திமுக கூட்டணி : 151 - 158
அதிமுக கூட்டணி : 76-83
வரும் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்?
அதிமுக கூட்டணி:28.48%
திமுக கூட்டணி: 38.20%
மநீம கூட்டணி: 6.30%
சசிகலா ஆதரவு: 1.09%
நாம் தமிழர் கட்சி: 4.84%
மற்றவை: 9.53%
தெரியாது: 11.56%

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும்?
37.51% பேர் ஸ்டாலினே முதல்வராக வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், எடப்பாடி பழனிசாமி - 28.33%, கமல்ஹாசன் - 6.45%, சீமான் - 4.93%, சசிகலா - 1.33% பேர் என தெரிவித்துள்ளனர்.
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்ததற்கு முன்பே இந்தக் கருத்துக் கணிப்பு மக்களிடம் நடத்தப்பட்டதால், அவரது பெயரும் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளில் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
உங்கள் தொகுதியில் பலமுனைப்போட்டி ஏற்பட்டால் யாருக்கு வாக்களிப்பீர்கள்?
அதிமுக கூட்டணி:28.39%
திமுக கூட்டணி: 38.51%
மநீம கூட்டணி: 6.28%
சசிகலா ஆதரவு: 1.11%
நாம் தமிழர் கட்சி: 4.84%
மற்றவை: 9.97%
தெரியாது: 10.90%
கூற இயலாது 11.99%

திமுக வெற்றி பெற எது உதவும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதன் முடிவுகள்:
ஸ்டாலின் தலைமை - 37.96%
மத சார்பின்மை - 8.35%
இபிஎஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலை - 6.72%
அதிமுக - பாஜக கூட்டணி - 9.16%
அதிமுக அரசின் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடு - 6.48%
வேறு கருத்து - 11.93%
தெரியாது / சொல்ல இயலாது - 19.41%
அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான கூட்டணி பற்றி நீங்கள் கருதுவது என்ன?
சந்தர்ப்பவாத கூட்டணி - 36.87%
தமிழகத்துக்கு நல்லது - 16.66%
அதிமுக ஆதாயமடையும் - 8.44%
அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் - 7.02%
பாஜக ஆதாயமடையும் - 5.91%
வேறு கருத்து - 7.61%
தெரியாது/ சொல்ல இயலாது - 17.49%

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு பத்துக்கு எத்தனை மதிப்பெண்கள் தருவீர்கள்?
13.06% பேர் 5 மதிப்பெண்களும்,
10.01% பேர் 1 மதிப்பெண்ணும்,
9.59% பேர் 8 மதிப்பெண்களும்,
8.92% பேர் 7 மதிப்பெண்களும்,
7.50 % பேர் 4 மதிப்பெண்களும்,
7.39 பேர் 10 மதிப்பெண்களும்,
6.74% பேர் 2 மதிப்பெண்களும்,
6.13% பேர் 6 மதிப்பெண்களும்
4.91% பேர் 0 மதிப்பெண்களும்,
4.84% பேர் 9 மதிப்பெண்களும்
13.85% பேர் சொல்ல இயலாது என தெரிவித்துள்ளனர்.
newstm.in
.png)