அடுத்த செக்..! செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு!

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.சட்டவிரோத பண பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.செந்தில் பாலாஜியின்குடும்பத்தினருடன் தொழில் முறையில் தொடர்புடையவர்கள் வீடுகளில் சோதனை நடந்து வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர் வீடு மற்றும் கோவை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும் அமலாக்கத் துறை தரப்பு கூறுகிறது.