1. Home
  2. தமிழ்நாடு

வரும் 11ம் தேதி முதல் திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் செயல்பாட்டுக்கு வரும்..!

1

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் கடந்த ஜனவரி மாதம் 2-ம்  தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டு அதற்கான நிறைவு பணிகள் நடைபெற்று வந்தது. இதன் பயன்பாட்டிற்கான தேதி நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெறாத காரணத்தினால் செயல்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் வரும் 11-ம்  தேதி முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது என அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து புதிய விமான நிலையம் முனையத்தின் செயல்பாடுகளை தொடங்கும் வகையில் அதற்கான பணிகளை அதிகாரிகள் விரைந்து செய்து வருகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து வருகிற 11-ம் தேதி காலை 6 மணி முதல் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் விமான நிலையத்தில் அலுவலகங்கள், விமான நிறுவனத்தின் அலுவலகங்கள், தீயணைப்பு துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அலுவலகம் உள்ளிட்டவை மாற்றம் செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

Trending News

Latest News

You May Like